கடையடைப்பு - மறியல் - உரையாடல் குறுங்கதை
அண்ணே, நம்ம கட்சி ஆரம்பிச்சு ஆறு மாசங்கூட ஆகல. நேத்து நிருபர் கூட்டத்தைக் கூட்டி வெள்ளிக்கிழமை மாநிலம் தழுவிய கடையடைப்பு, மறியல்ன்னு அறிவிப்புக் குடுத்தீங்க. இன்னிக்கு எல்லாச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள்ல உங்க அறிவிப்பு வெளியாகி இருக்குது. நம்மக் கட்சிப் போராட்டம் வெற்றி அடையுமா?
@@@@
ஏன்டா தம்பி இந்த சந்தேகம் உனக்கு?
@@@
அண்ணே, நம்ம கட்சில தொண்டர்களே கெடையாது. நாம தவறான வழில சம்பாதிச்ச பணம் குவிஞ்சு கெடக்குது. ஒவ்வொரு ஊரிலயும் நம்ம கட்சிப் பொறுப்பாளர்களை வெலைக்கு வாங்கி அவுங்களுக்கு மாதச் சம்பளமும் குடுக்கறோம். அவுங்கெல்லாம் எதுக்குமே தகுதியற்ற ஆளுங்க. நீங்க அறிவிச்ச போராட்டம் வெற்றியடையுமா என்பது சந்தேகம் தான்.
@@@
கவலைப்படாதடா தம்பி பொன்னுரங்கம். எந்தக் கட்சி போராட்டம் நடத்துவதா அறிவிச்சாலும் அதை வெற்றியடையச் செய்யறவங்க அழைப்பில்லா விருந்தாளிங்கதான்.
@@@@
என்ன அண்ணே சொல்லறீங்க? எனக்கு கடுகளவும் புரில.
@@@@
அழைய விருந்தாளிங்க ரவுடிப் பயல்கள் தான். போராட்டத்தைச் சாக்கா வச்சு மாமூல் தராத கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மேல கல்லை வீசி அடிப்பானுக. அதுக்குப் பயந்துட்டே கடைகள் நிறுவனங்களத் தொறக்கமாட்டாங்க. பேருந்து, லாரி, ஆட்டோ கல்லடிக்குப் பயந்து ஓடாது. இந்த ரவுடிங்கதான் ஒரு போராட்டத்தை வெற்றியடையச் செய்யறவங்க. இது மாதிரி போராட்டங்கள் தான் ஒரு கட்சிய வளர்க்கும் உரம். பொது மக்களுக்கு எந்த அளவுக்கு இடையூறு செய்யறமோ அந்த அளவுக்கு ஒரு கட்சி வளரும்.
@@@@
நாம ஆட்சியப் பிடிக்க எத்தனை வருசம் ஆகும்?
@@@
அறக்கட்டளை ஒன்னத் தொடங்கணும். மக்களுக்கு உதவி செஞ்சு நல்ல பேரை வாங்கணும். கறுப்பை வெள்ளையாக்கவும் இதுதான் சிறந்த வழி.
@@@
உங்க திறமை என்னை திகைக்க வைக்குது. கறுப்பில மக்களுக்குக் குடுத்தா நம்ம கட்சிக்கும் உங்களுக்கும் ஓசிலே விளம்பரம் கெடைக்கும். உங்க இலவசங்களை வாங்கறவங்க உங்களை 'வாரி வழங்கும் வள்ளல்' ஆக்கிடுவாங்க அண்ணே.
###@
இப்பத்தான்டா என்னச் சரியா புரிஞ்சிருக்கற. ரொம்ப சந்தோசம்டா தம்பி.