காதல் விண்ணப்பம்
💐 காதல் விண்ணப்பம்
உண் கண்கள் ஆயிரம் அம்புகள்
உண் மவுணம் நூறு மொழிகள்
உண் பேச்சு ரசிக்கும் கவிதை
உண் சிரிப்பு சிலிர்க்கும்
சங்கீதம்
உண் நடை அழகிய
நாட்டியம்
உண் இடை கவிஞரின்
தொடு வானம்
உண் உடல் மொழி இளமையின் உச்சம்
உண் பார்வை என் மீது பட்டவுடன்
என் இதயம் என்னிடம் இல்லை
எங்கு சென்றது என்று
தேடினேன்
உண்னை நாடி வந்ததாக தகவல்
என் இதய ஒலி கேட்டாயா
உண் பெயரை மட்டும் ஓயாமல்
உச்சரிக்கும் என் இதய மொழி கேட்டாயா
எங்கும் நீயே எதிலும் நீயே
என்னுள் எப்போதும் நீயே
என் உள்ளம் கவர்ந்த காதலியே
உண்ணுள்ளும் நானோ
கண்ணே கண்மணியே
காதல் இளஞ்சோலையே
காதல் ஓவியமே
என் உயிரில் கலந்த உறவே
உறக்க கூறுகிறேன்
உன்னை நான் காதலிக்கிறேன்.
தயவு செய்து
என்னை வேண்டாம் என்று சொல்லிவிடாதே
வேண்டும் என்று சொல்லி விடு வாழ்க்கை வெற்றி பெற்றதாக நினைப்பேன்.
- பாலு.