வெளிநாட்டு வாழ்க்கை

உன்னை தழுவிட
பத்து விரலும்
காத்திருக்கு , பாவமென்று
எனை வீழ்த்த
செட்டியாரின் கடனிருக்கு
தொலைபேசி உரையாடல்
எல்லாம் உறக்கத்தில்
மிதந்திருக்கு, தூரமாய்
நீயிருந்தும் புன்னகை
மட்டும் உடனிருக்கு
அயல்நாட்டு வாழ்க்கை
எல்லாம் பணத்திற்காக
விளைச்சிருக்கு அறுவடை
நாள்ளன்று வயதோ
ஐம்பதை தொட்டிருக்கு
ஆசையெல்லாம் பெரும்
ஓசையை அடங்கியிருக்கு
அத்தை மகளை
பிரிந்த நாட்கெல்லாம்
திரும்பவும் கிடைக்காது
ஆறாத பெருவடுவாய்
இறப்பவரை உடனிருக்கும்.