மாப்பிள்ளை தனிமை விரும்பியா -- உரையாடல் குறுங்கதை

வாங்க, வாங்க. குறிப்பிட்ட நேரத்துக்குத் தவறமா வந்திட்டீங்க. நீங்க நேரத்தை மதிக்கறத நான் ரொம்ப பாராட்டறனுங்க.
@@@@@
நாங்க எப்பவுமே காலத்தை மதிக்கிறவங்க. எங்க பையனை பிடிச்சிருக்குதுங்களா? உங்க பொண்ணு என்ன சொல்லுதங்க.
@@@@
உங்க பையனைப் பிடிச்சிருக்குதுங்க. பையன் பேருதான் கொஞ்சம் இடிக்குதுங்க.
@@@@
பையம் பேருக்கு என்ன கொறை? நாங்களும் வசதியான குடும்பம். பையம் பேருல உள்ள 'தனி' அவன் செல்வாக்கானவன்ங்கிறது குறிக்குதுங்க.
@@@@
மாப்பிள்ளை பேரு தனிராம். 'ராம்'ங்கிறது சரிங்க. ராமரைப் போல மாப்பிள்ளை ஒழுக்கமா இருப்பாருன்னு நம்பறோம்.
@@@@
எங்க பையன் ஒழுக்கத்தில சொக்கத் தங்கமுங்க..திரைப்படம்கூட பாக்கமாட்டான். பொண்ணுங்கள உடன்பிறப்பா நெனைக்கிறவனுங்க.
@@@@
இருந்தாலும் அந்த மாப்பிள்ளை பேருல உள்ள :தனி'தான் பொண்ணுக்குப் பிடிக்கலீங்க..அவரு தனிமையை விரும்பறவரோ
அதனால தன்னோட வாழ்க்கை பாதிக்குமோன்னு
எங்க பொண்ணு பயப்படறா?
@@@@
சரி. நீங்க என்னதான் சொல்லறீங்க?
@@@@@
நீங்க 'தனி' ன்னா 'செல்வாக்கான'-ன்னு சொல்லீட்டீங்க. உங்க பையங்கூட வாழப்போறவ எங்க பொண்ணு. உங்க பையம் பேர 'செல்வராம்'-ன்னு மாத்துனாத்தான் எங்க பொண்ணு உங்க பையனக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பாளாம்.
@@@@
அப்பா, இது அநியாயம்பா. எம் பேர மாத்தச் சொல்ல இவுங்களுக்கு என்ன உரிமை இருக்கு? நான் வங்கி உதவி மேலாளரா இருக்கிறேன். கூட வேலை பாக்கிற அதிகாரிங்கள்ல இருந்து மேலதிகாரிகள் வரை என்னை எல்லாம் 'மிஸ்டர்' தனி- ன்னு தான் கூப்புடுவாங்க. இந்த கனிமொழி வேண்டாப்பா. 'தனிமொழி' -ன்னு
பேருள்ள பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். வாங்க போலாம். தனிராமுக்கு தனிமொழி தான் பொருத்தமா இருக்கும்.
@@@@
சரி போங்கய்யா. நாங்க என்னவோ எங்க கனிமொழிக்கு மாப்பிள்ளை கெடைக்காம அலையற மாதிரி நெனைச்சிட்டு போறீங்க. போங்கய்யா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தனிராம் என்ற பெயரை 29-11-18 தேதியிட்ட தினகரன் நாளிதழில் பார்த்தேன்.

எழுதியவர் : மலர் (30-Nov-18, 1:46 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 189

மேலே