நட்பு

உலகில் உள்ள அதிசயங்களில்
உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால்
உன் விழிகள் இரு அதிசயங்களாய் இருந்திருக்கும்

உனக்கான விசிறிகளாய் தான் மரங்கள் படைக்கப்பட்டது
சாலையில் நீ நடந்தால் உனக்கு வேர்த்துவிடாமல் இருக்க
வீசி கொண்டிருக்கின்றனவே பொறாமை படுகின்றன பூக்கள் எல்லாம் .....

உன் மூச்சை சுவாசித்த வாழும் கற்று
நீ சிந்திய வெட்கத்தையெல்லாம்
கோர்த்து வைத்துகொள்ளும் இயற்க்கை


கருவிழி உளி கொண்டு
கரும்பாறை என் மனம் அதில்;
நட்பெனும் சிலை வடித்திட்டாய்

திட்டி கொண்டே இருப்பாய் நீ என்னை
நீ தீட்டாத நேரங்களில் எல்லாம்
விக்கி கொண்டே இருக்கும்
என் இதயம் உன் நினைவில்


வார்த்தை இல்லை இனி தமிழில் உன் நட்பை பற்றி சொல்ல
தமிழில் இருக்கும் எல்லா நட்பு கவிதையும் கூட
உன் பெயரிலும் என் பெயரிலும் இருக்க ஆசை கொள்கின்றன ....

எழுதியவர் : ராஜேஷ் (3-Dec-18, 1:20 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : natpu
பார்வை : 663

மேலே