அன்பின் அதிபதி

தீரா தொற்றுநோயின் பிடியில்
தாளா எதிர்வினையை தாங்கி
மீளா வாழ்வு வாழ்கிறேன்

அருகிலோ தொலைவிலோ என்னிடம்
அனுகிடும் எவருக்கும் நொடியினில்
தொற்றிடும் தீவிரமாய் என் நோய்

பிறவி முதலே என்னுடன் இருந்து
வளரும் பொழுதில் பன்மடங்காய் பெருகி
என்னுடல் முழுதும் நீக்கமற நிறைந்தது
அன்பெனும் கொடுநோய்

எழுதியவர் : (3-Dec-18, 2:45 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : anbin athibathi
பார்வை : 77

மேலே