உழவும் மறமும்

கூவும் சேவலும் முழங்கும் சங்கும்
இடுப்பணி வேட்டியும் மார்பணி கவசமும்
கரம்பிடித்த ஏரும் தோளணைத்த வில்லும்
தாள்தைத்த முள்ளும் உடலேற்ற வாளும்
ஏர்கீறு நிலமும் தேரழுந்து தடமும்
உடல்முழு தும்தான் ஏற்றவெண் புழுதியும்
உடல்வழி வியர்வையும் நிலம்சிந்து குருதியும்
ஏற்ற கடமையில் தான்கொண்ட உறுதியும்
ஏர்கொண்ட மாடது தேர்கொண்ட பரியொக்க
உழுகளம் அதுவே போர்க்களம் ஆக
வீடுசேர் நெல்லும் நாடுசேர் புகழும்
உழவும் மறமும் இருகண் நமக்கே

எழுதியவர் : பாலகிருஷ்ணன் (3-Dec-18, 9:58 pm)
சேர்த்தது : வை ச பாலகிருஷ்ணன்
பார்வை : 45

மேலே