பச்சுரங்கு

பாட்டிம்மா, பாட்டிம்மா....
@@@@
யார்ரா அவன். தலைதெறிக்க'பாட்டிம்மா, பாட்டிம்மா'ன்னு ஓடிவர்றவன்.
@@@@
நாந்தான் பாட்டிம்மா பரமசிவன்.
@@@@
உங்க பக்கத்துத் தெரு பச்சையப்பன் தாத்தா பேரன் பரமசிவன்.
@@@@
வாடா பரமு. எதுக்கடா ஓடி வந்த?
@@@@@
என் மனைவிக்கு ஆண் குழந்தை வீட்டிலயே பொறந்திருச்சு. பத்து நாளு ஆச்சு. நான் இன்னிக்கு நாலு மணிக்குள்ள நகர சபைப் பதிவேட்டில பையன் பேரு, பொறந்த தேதி, தாய் தந்தை பேரெல்லாம் பதிஞ்சாகணும். நீங்க தொலைக்காட்சில வர்ற இந்தி திரைப்படம் தொடரெல்லாம் பாக்கறவங்காச்சே. எம் பையனுக்கு. வைக்க ஒரு இந்திப் பேரச் சொல்லுங்க பாட்டிம்மா.
@@###
ஏன்டா பரமசிவா, உனக்குப் பிடிச்ச தமிழ்ப் பேர பையனுக்கு வைக்கிறதுடா?
@###
ஊருள்ள இருக்கிற பிள்ளைங்க எல்லாம் இந்திப் பேருங்கள வச்சிட்டு இருக்கறபோது நாமட்டும் எம் பையனுக்குத் தமிழ்ப் பேர வச்சா சனங்க என்னக் கேவலமா நெனைப்பாங்க. இன்னும் கால் மணி நேரந்தான் இருக்குது. அதுக்குள்ள நான் நகரசபைக்குப் போகணும்.
@@@@
சரிடா சொல்லறேன். 'பச்சுரங்'கு (Bajrang) ன்னு வையுடா. நான் இந்தி ஆசிரியர்கிட்ட போன வாரமே அர்த்தம் கேட்டு தெரிஞ்சிட்ட பேரு. அது நம்ம அனுமான் சாமி பேராம்.
@@@@
சாமி பேரா? ரொம்ப சந்தோசம் பாட்டிம்மா. வர்றேன்.
@###
மகராசனா போயிட்டு வாடா பரமு.
■■■■■◆◆◆◆◆◆■■■■■■■■■■■◆◆
Bajrang = Lord Hanuman

எழுதியவர் : மலர் (5-Dec-18, 4:41 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

மேலே