தினந்தோறும்
உன் கண்ணாடி வளையல்கள் என் செவியோடு கவிபாடுது!
உன் காதோர தோடுகள் என்
கண்ணோடு நிழலாடுது!
உன் குரலின் வசிகரம் என்னை காந்தமாய் கட்டி இழுக்குது!
இமைக்கும் இமைகள் இரண்டும் என் இதயத்தில் தாளம் அடிக்குதடி!
உன் மோகன புன்னகை என் மூச்சுக்காற்றில் சுழன்று அடிக்குதடி!
உன் இதழோர வரிகள் என் இதயத்தில் புது வெள்ளம் பாய்ச்சுதடி!