வெறியன் வெட்டும் அறிவால் ஜாதி

வெறியன் வெட்டும் அறிவால்

/ஜாதி/

எழுத்து
S.ரவி.


அவள் பெயர் கவிதா வசதியுடன் சொந்தபந்தங்களும் எப்போதும் பரபரப்பாகவே காணப்பட்டது அவளின் குடும்பம் ,

அழகானவள் அன்பான குணம் நிறைந்த கருணை மனம் கொண்டவள்

இவளின் தந்தை மளிகை வியாபாரி தாய் இல்லத்தரசி இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள்

முதல் மகன் இருக்கிறானதையின் மளிகை வியாபாரத்தை அவருடன் இருந்து பார்த்துக் கொள்கிறான் கொஞ்சம் இல்லை அதிகமாகவே கோபம் கொண்டவன் மற்ற ஜாதி மனிதர்களை கண்டாள் சற்றே குரலை உயர்த்தி பேசுவது இவனது வழக்கமாகவே கொண்டிருந்தான்

இதை சற்றும் கவி விரும்பவில்லை அவர்களும் நம்மை போலத்தானே என் இப்படி பேசுகிறாய் என்பாள் அதற்க்கு அவளை திட்டி யார் யாரிடம் எப்படி பேசுவதென்று எனக்கும் தெரியும் என்று மூஞ்சை காட்டுவான்

இவனுக்கும் அதே ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து மனம் முடித்து வைத்தனர்

இவர்களது இரண்டாவது மகள் வசந்தி இவள் படிப்பு சரியாக வரவில்லை என்ற காரணத்தினால் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்

ஆனால் இவள் அடுத்தவர்கள் இல்லத்தில் போய் வாழ மறுப்பதால் இவர்கள் அவளுக்கு சற்று வசதி குறைந்த வீட்டோட ஒரு அடிமையை அதே ஜாதியில் இருந்து திருமணம் செய்து வைக்கின்றனர்

மூன்றாவது நம் கதையின் நாயகி கவி
கடைக் குட்டி என்பதால் இல்லத்தில் இவள் மீது அனைவருக்கும் அன்பு அதிகம் செல்ல பிள்ளை பொத்தி பொத்தி வளர்த்தனர் அவள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து எப்போதும் செல்லமாகவே வளர்த்தனர்

கவி பள்ளி படிப்பை முடிக்கிறாள்
இவள் இல்லத்தில் இவளுக்கு திருணம் செய்ய யோசனை செய்து அதே போல் ஓர் அடிமை தேட தொங்கும் வேளையில் .

தொடரும்.

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (7-Dec-18, 9:55 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 142

மேலே