நான்தான் பதிவேன்

ரயில் அதற்கான சத்தத்துடன் கிளம்பியது. ரயில் பெட்டியின் உள்ளே அழகான பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடையும் ஆபரணங்களும் கருவத்துடன் இருந்தன. அழகிய இளைஞன் வந்து அவள் அமர்ந்த எதிர்புறம் உட்க்காந்தான் உட்காந்ததிலிருந்து அவளையை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் அணிந்திருந்த ஆடையும் ஆபரணமும் பேச ஆரம்பித்தன......

நெற்றிப்பொட்டு : :- என்னதான் அவன் முதல பாத்தான், என்னய்யா புடிச்சதனாலதான் அவளையை அவன் பாக்குறான் நான்தான் அவன் மனசுல பதிவேன்

என்று சொன்னதுமே தோடு கொஞ்சம் கோபத்துடன் ..........

தோடு ::- ஏய்! நெற்றிப்பொட்டு ஒன் சைஸ் என்னனு கண்ணாடியில பாரு. அப்பறமா பேசு ப்ளடி ராஸ்கல்.... நீ அவன் கண்ணுக்கு தெரியுறதே பெருசு அவன் மனசுல எப்படி பதிய போற. நான்
காற்றில் அசையும்போது அது ஒரு நாட்டியம் மாதிரி இருக்கும் அதனால நான்தான் பதிவேன்.

என்று சொல்லி காற்றில் நாட்டியம் ஆடியது .......

கழுத்தில் தொங்கிய செயின் சிரித்துக்கொண்டே ..........

செயின் ::- நீங்க ரெண்டு பேருமே சைஸ பத்தி பேசக்கூடாது . ஒங்களுக்கு தகுதியில்ல . கழுத்த சுத்தி நான் இருக்குறதனால அவளுக்கு ஒரு பளபளப்பு அவனுக்கு ஒரு மினுமினுப்பு அதனால நான்தான் பதிவேன்

உடனே அவள் அணிந்திருந்த சுடிதார் ...........

சுடிதார் : :- அவளுடைய அழகே இன்னும் பிரமாதமாக காட்டுவது நான்தான் நான் மட்டும்தான்.... நான் மட்டும்தான்....... அவன் மனசுல பதிவேன்

என்று வேகமாக கத்தியது .

கொலுசு பாடிக்கொண்டே

கொலுசு : : - என்னுடைய ஒளி அவனுக்கு கர்னாடிக் சங்கீதம். எல்லாருக்குமே சங்கீதம் மட்டும்தான் மனசுல பதியும் அதனால நான் மட்டும்தான் மனசுல பதிய முடியும் .

இதையெல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த செருப்பு சொன்னது

செருப்பு : நீங்க எல்லாம் மனசுல பதிவிங்கோளோ மாட்டிங்களோ அது எனக்கு தெரியாது.
இன்னும் கொஞ்ச நேரம் இவன் பாத்துக்கிட்டே இருந்தா நான் அவன் கன்னத்திலே பதிவேன் அதை அவன் மறக்கவே முடியாது ............

- பேய்க்கரும்பன்கோட்டை அகிலன்

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (8-Dec-18, 12:41 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 146

மேலே