ஆசிரியர்

என்
சரஸ்வதி
தாயே

உன் அறிவை
தந்தாய்
உன் மொழியை
தந்தாய்

என் வெற்றியின்
தீப ஒளியே
என்னை
படியேற்றினை
என் வாழ்வில்
ஒளியேற்றினாய்

நித்தம் நித்தம்
என் வெற்றியின்களிப்பில்
உன் உழைப்பல்லவா

வெற்றி
எனும் கொடியை
பிடிக்க ஏறுகிறேன்
அதன் அஸ்திவாரம்
நீயல்லவா

எத்திசையும்
அறியாத எனக்கு
எட்திசையும்
அறிய வைத்தாய்

படிப்பு எனும்
கசப்பு
உன் கைப்பட்டதும்
இனிப்பாய்
மாறியது என்ன
ஒரு அதிசயம்?
இதுவல்லவா
அற்புதம்!

கல்லாய்
இருப்பவரை
கற்சிலை
ஆக்குவாய்

என் குறை
எனக்கே அறியாது
அதை அழித்த
அறிவின் அழகே......!

என் வருங்கால
உலகம்
அழகாக அமைய
இந்த
முயற்சியோ!

எழுதியவர் : Devibala728 (8-Dec-18, 2:14 pm)
சேர்த்தது : Devi Bala
Tanglish : aasiriyar
பார்வை : 9784

மேலே