என் ஆசை ....................
புள் வெளியில்
என் கால்கள் நடை பயில வேண்டும்..........
பனித்துளியில்
என் தாகம் நான் தீர்க்க வேண்டும்..........
மலர் வாசம்
என் சுவாசமாக வேண்டும்...........
வெண் மேக திரளோடு
நான் விளையாட வேண்டும்.........
நிலா தோழி கை கோர்த்து
கதை பேசிட வேண்டும்........
தாயாக மாறி தென்றல்
என் தலை வார வேண்டும்.............
பறவையின் பாஷையில்
என் பரிமாற்றம் வேண்டும்..............
நதி நீரில் சங்கீதம்
நான் கேட்க வேண்டும்..........
இத்தனை ஆசையை இறைவா
நீ நிறைவேற்ற வேண்டும்.........................