அன்புள்ள கணவா( உன் வரவை எதிர் பார்த்து)..............
![](https://eluthu.com/images/loading.gif)
தலையணையில் முகம் புதைத்தும்
விழிகள் தூங்க மறுக்கிறது
ஒளி குறைந்த
குண்டு பல்ப் வெளிச்சத்திலும்
நீ மாலை இட்ட புகைப்படம்
என் கண்களை உறுத்தி செல்கிறது
உன் வரவை எதிர் பார்த்து
ஜன்னல் வழியே
வீசும் தென்றலோடு
கொஞ்சி மகிழ்கிறேன்
நீ அனுப்பிய கடிதங்கலோடும்
கலையாத நினைவுகளோடும்
உன்னை மட்டுமே சுமந்து
இரவெல்லாம் விழிக்கிறேன்
நீ தொலைவிலே இருந்தாலும்
நீ கட்டி போன தாலி
என் நெஞ்சோடு மோதும் போதெல்லாம்
உன் நினைவோடு போராடுகிறேன்
நீ இட்ட விதை
விளைச்சலுக்கு தயாராகிறது
விரைவில் நீயும் வந்து விடு
நம் விளைச்சலை நீயும் கண்டுவிடு
இரவோடு இரவாக
பகலோடு பகலாக
நாட்களையும் யுகங்களையும்
நகர்த்தி கொண்டிருக்கிறேன்
நொடிக்கு நொடி
உன் வரவை எதிர் பார்த்து................
இப்படிக்கு...................உன்னவள்