சமூகம் மறந்தேன்

சமூகம் மறந்தேன்,
மனித சமூகம் மறந்தேன்,
எவ்வளவு தூரம் சென்றேன் என்று அறியேன்,
இந்த உலகோடு பொருத்தம் இல்லாதவன் நானாக எங்கோ சிந்தனை சிறகை விரித்து பறக்கிறேன்.

மொழிகளில்லா உலகமா அது,
முகங்கள் தெரியதா உலகமா அது,
குழிபறிப்பறியாத உலகம் அது,
உண்மையின் தன்மையை ஆய்கிறது,
தீர்க்கமாக ஆலோசிக்கிறது,
கெடுதலை பரப்பும் உலகைவிட எவ்வளவோ மேல் நிற்கின்ற உலகம் அது.

கொடும் உலகின் இராஜாவாய் இருப்பதைவிட நல்லுலகின் சிறு தூசாய் இருந்துவிட்டு போவோம் என்றே எண்ணம் பிறந்திட திண்ணமாக முடிவு செய்தேன் நல்லோர்களின் பாதங்களில் செருப்பாய் இருப்பது சிறப்பே.

சமூகம் மறந்தேன்,
பலவீனமான சமூகம் மறந்தேன்,
அரைகுறை ஆடையில் ஆணவம் பிடித்த சமூகம் மறந்தேன்,
வள்ளுவனும், வள்ளலாரும் கூறிய அறநெறிகளை நெஞ்சில் பொதித்து தனித்துவாழ விருப்பம் கொண்டேன்.
விருப்பம் கேட்ட இயற்கையும் நல்ல சேதிகளாய் அனுபவங்களைத் தந்து,
மன அழுக்கு கொண்டோரை தூர ஓட்டி, நல்ல மனங்களால் சூழச் செய்து,
மனதின் பலவீனங்களைப் போக்கி,
பலமான அன்பை நிரப்பி அகிம்சை என்னும் ஆனந்தம் பருக, பிறரை தொந்தரவு செய்ய வேண்டாமென சமூகம் மறந்தேன்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Dec-18, 9:42 pm)
Tanglish : samoogam maranthen
பார்வை : 765

மேலே