மரணம் ஒன்றுமில்லை

மரணம் ஒன்றுமில்லை.
அதை முடிவென்று எண்ணவில்லை.
நான் இந்த அறையில் இருந்து அடுத்த அறைக்கு நழுவிச் செல்கிறேன் இந்த அறையில் கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டதால்.

எதுவும் நடக்கவில்லை.
எல்லாம் சரியாக உள்ளது.
எல்லாம் உற்சாகமாகத் தொடர்கிறது.
நான் நானாக இருக்கிறேன்.
நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள்.
வாழ்ந்து முடிந்த வாழ்வை தொடமுடியாது.
மீண்டும் அதை மாற்றமுடியாது.
நாம் எப்படி இருந்தோமோ அப்படியே தான் இருக்கிறோம் காட்டுமிராண்டிகளாய் காட்டில் வாழ்தல் போலே.

என்னைப் பற்றி நீங்கள் பேசும் வார்த்தைகள் யாவும் ஏற்கனவே உங்களால் பயன்படுத்தப்பட்டு என்னை நோக்கி வீசப்பட்டவை தான்.
உங்கள் நாக்குகள் உதிர்க்கும் வார்த்தைகளில் எந்த வித்தியாசமும் இல்லை.
கடுமையான அல்லது மோசமான வடுக்களை அணியவில்லை.
ஏற்கனவே நாம் சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்த நிகழ்வுகளுக்காகவே சிரிக்கிறோம் இப்போதும்.

விளையாடல்,
புன்னகை செய்தல்,
என்னைப் பற்றிய சிந்தனை செய்தல்,
எனக்காக வழிபாடு செய்தல் என்று வழக்கமான செயல்களின் பட்டியல் நீளும்.
என்னை அழைக்க நீங்கள் பயன்படுத்தும் பெயர் ஏற்கனவே பயன்படுத்தியது தான்.
முயற்சியின்றி பேசக்கூட இயலாது,
துன்பங்களின் வாழ்வின் யதார்த்தத்தை உணர முடியாது.

வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும் அர்த்தம் உள்ளவை தான்.
ஆனால், அவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவையாக இருக்கின்றன.
அங்கு நிச்சயமாக உடைக்க முடியாத தொடர்ச்சியான தொடர்பு இருக்கிறது ஒவ்வொன்றுக்கும் இடையே.

இந்த மரணம் பயப்பட வேண்டியதல்ல,
ஒரு அழகிய சிறு விபத்து.
என் பார்வைக்கு வெளியே நான் இருப்பதால் ஏன் என் மனதைவிட்டு வெளியே இருக்க வேண்டும்?

நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், ஒரு இடைவெளிக்காக, உங்களுக்கு கொஞ்சம் அருகாமையில், கொஞ்சம் விளிம்பில்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே.
வேதனைப்பட எதுவுமில்லை.
இழப்பதற்கு எதுவுமில்லை.
எந்தவொரு பெரிய மாற்றம் நடந்தாலும், ஏற்கனவே நடந்ததாகவே அறியப்பட அதன் பிறகு நடக்கும் எல்லா நிகழ்வுகளுமே முன்பு நடந்ததைப் போலவே நடக்கப் போகின்றன அறிவியலின் படி.
எதையும் புன்னகையோடு எதிர்கொள்ளப் பழகிக் கொள்வோம்...
மீண்டும் மீண்டும் சந்திப்போம்!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Dec-18, 1:24 am)
Tanglish : maranam onrumillai
பார்வை : 3490

மேலே