ஆகாயம்
வானம்
மேகக்கப்பல் நீந்தும் கடல்
அங்குதான் சித்தரிக்கிடக்கிறது
நட்சத்திரங்களின் உடல்
அது தேவர்கள் வாழும் திடல்
வானவில் வானம் எழுதிய மடல்
பிறை வானம் வாசிக்கும்
பறை
ஓசோன் வானம் போர்த்திக்கொண்ட
திரை
ராக்கெட் வானம் போட்டுக்கொள்ளும் தடுப்பு ஊசி
வானம்
ஆன்மாக்கள் புண்ணியம் தேடும்
காசி
ஆகாயமே இடியை
அனுப்பி எங்களுக்கு தராதே காயமே
புயலை அனுப்பினால்
தாங்காது எங்கள் காயமே
மீறி வந்தால் ஏழை வயிறு
உணவின்றி காயுமே
புதுவைக் குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
