எழுபதாண்டின் பின்பும் ஏளனமாய்
பல காலம் போரிட்டு
பகுத்தறிவை செலவிட்டு
பழுத்த தலைவனை முன்னிறுத்தி
பாரதத்தின் அடிமை அறுத்தெறிந்தோம்!
இமயத்தில் எழுந்த குதுகலம்
இடந்தோறும் இடர் தீர்க்க
இயன்ற வரை இனிதாக
இறைஞ்சு இறைஞ்சு குதுகலித்தோம்
எழுபதாண்டு ஆனபின்னும்
ஏழ்மை நிலை தீராமல்
ஏனோ அதையும் எண்ணாமல்
எட்டி நிற்பதுவும் சரிதானோ?
பரந்த உலகம் நம்மது - இப்
பாரத தேசம் உன்னது - அதை
பாதுகாக்க புறப்படு - இரண்டில் ஒன்று
பார்த்து விடுவோம் கைக்கோரு !