வீராணம் ஏரி

செந்நாரை கூட்டங்கள் வற்றிய
ஏரியின் சிறு ஓடையில்
தன் அலகுகளால் மீனை
ருசிப் பார்த்துக் கொண்டிருந்தன
சுற்றியும் தன் உறவுக்காரர்களோடு
காகம் இரை வேண்டி
கரைத்துக் கொண்டே வலம் வந்தன
அங்கும் இங்கு மென்றுமாய்
கொக்குகள் நடைப் பழகிக்
கொண்டிருந்தன நீரோடையில்
கோடையின் வெக்கை
நீர்ப்பரப்பின் எல்லையை
சல்லடை யாக்கிக் கொண்டிருந்தன
நாணலின் விளிம்பில் அமர்ந்து
இருந்த தேன்சீட்டு நடனமாடியது
நாணலின் போக்கிற்கு
மறுகரை நோக்கி நகரும்
சிறார்கள் மகிழ்ந்தோடுவதை
வாய்பிளந்துப் பார்த்தது
நீரற்ற மணல்ப்பரப்பு
விவசாய நிலங்களுக்கு
விளைச்சலுக்கு வராத இந்நீர்
சென்னை பட்டி தொட்டியெல்லாம்
பாய்ந்தோடுகிறது தொண்டை
நாட்டின் சீவகாருண்யம்.

எழுதியவர் : சூர்யா. மா (14-Dec-18, 10:45 pm)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 131

மேலே