உருவம் மாறாமல்

மனிதனை மனிதன்
நம்பாமல்
மரத்தை நம்பியபோது
கண்டுபிடிக்கப்பட்டதுதான்
கதவு..

மரத்தின் மீது இவனுக்கு
சந்தேகம் வந்தபோது
ஜனித்ததுதான்
பூட்டு..

பூட்டும் கதவும்
இருக்கும்போதே
உருவம் மாறாமல்
உள்ளே புகுந்திடுவான்-
மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Dec-18, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uruvam maaramal
பார்வை : 160

மேலே