மௌனம்

மௌனம்
============================================ருத்ரா

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாது.
காதல் தாக்கிய புலி
புல்லைக்கூட
தின்றுகொண்டே இருக்கும்.
இந்த பூங்காவில்
அவள் இங்கு
முகம் திருப்பினால் தானே
ஏதாவது சொற்களை
தின்று மென்று விழுங்கி
கொட்டிக்காட்டலாம்.
அவள் மௌனம்
அந்த காக்கா முள்ளைவிட‌
கடுப்பானது கூர்மையானது.

=================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (18-Dec-18, 9:21 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : mounam
பார்வை : 623

மேலே