என் கனவுகளுடன் நான்

கட்டி இலுக்கும் காலச்சக்கரம்,
அயர்ந்து கிடக்கும் போது ஆறுதலாய் அரவணைக்கும் மாய உலகம்...
என்றும் என் கனவுகளுக்கு சாயம் கொடுத்ததில்லை அவை பழிக்காது என்பதாலோ..

அனைத்தும் அறிந்த மனம் இன்று ஏனோ!
சிறு பிள்ளையாய் அடம்பிடிக்க, எதை சொல்லி ஆறுதல்படுத்த....
ஆசானாய், தோழனாய், நலன் விரும்பியாய், அரவணைக்கும் தந்தையாய்
வாழ்க்கை முழுதும் வேண்டும் என்ற சுயநலம் குடியேறி விட்டதோ?

காரணமில்லா காரணத்துடன் துயிலின்றி தவிக்கிறது மனது...
உன் அகத்தினூடே ஒளித்து வைத்த அன்பும், அரவணைப்பும், அமைதியும்
மொத்தமாய் அடைந்திட மனம் ஏங்குதோ?

ஒற்றை வரியில் ஆயிரம் அர்த்தம் காணும் உன் கண்களுக்கு
என் ஒற்றை பார்வையின் அர்த்தம் ஏனோ புரியவில்லை...
மற்றவர் புன்னகயில் புன்னகையை தேடும் புதியவன்.. என்னவன் நீ..!
என் கனவுகளுக்கு சாவி கொடுத்தவன்...
என் மௌனத்தின் மொழியறிந்த முதல் அந்நியன்....
மாசில்லா பார்வையில் மதி மயங்க செய்தவன்..

காரிருளை மெல்ல மெல்ல விழுங்கி கொண்டிருக்கும் கதிரவன் போல
இவளது தொண்டை குழியில் விழுங்கி விம்மி விழுகிறது உன் நினைவுகள்..
என் கனவுகள் கானல்நீரென்று புத்திக்கு தெரிந்தும் மனம் ஏன் உணரமறுக்கிறதோ....

உனக்குரியவளா யான் அறியேன்..இது என் உள்ளத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை
மீண்டுமோர் ரணத்தை உன்னுல் விதைக்க மனமின்றி புதைக்கிறேன் என் தலையணையில் ...
தனிமையும், நினைவுகளும் என்றும் என்னை காயப்படுத்தியதே இல்லை...
என் கனவுகளில் சிறகடிக்கும் என் நினைவுகளுக்கு சமர்பணம்....

இப்படிக்கு
நான்

(இது நான் எழுதிய முதல் கவிதை..பல தயக்கக்களுக்கு பிறகே வெளியிட்டுள்ளேன்)

எழுதியவர் : ப்ரியா (18-Dec-18, 1:35 pm)
பார்வை : 1182

சிறந்த கவிதைகள்

மேலே