காதல் கடிதம்

💕💕💕💕💕💕💕💕💕💕💕

*காதல் கவிதை*

படைப்பு
*கவிஞர் கவிதை ரசிகன்*

💕💕💕💕💕💕💕💕💕💕💕

பெண்ணே!
உனக்கு
கடிதம் எழுதி எழுதி
கைவிரல்கள் தேய்ந்தது

உன் பின்னால்
நடந்து நடந்து பாதம் தேய்ந்தது

மனம் மாறவாய் என்ற
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் தேய்ந்தது

உன்னை
நினைத்து நினைத்து
வாழ்நாட்கள் தேய்ந்தது

உன் பிடிவாதத்தை
எண்ணி எண்ணி
உடல் தேய்ந்தது

ஆனால்...
ஆனால்....
இன்னும்
அணுவளவும் தேயவே!இல்லை
என் நம்பிக்கை....!!!

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (19-Dec-18, 4:03 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 34

மேலே