எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
***************************************************
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
இங்கே வந்த பெண்ணிலா மங்கை அவள் கண்ணிலா
அங்கை நோக்க அதனுளா தாங்கும் அவ்வானி டையிலா
திங்கள் எனும் சொல்லிலா தூங்கா எந்தன் நெஞ்சிலா
கங்கை கொண்ட சடையிலா சிங்க வாஹினி சிரத்திலா
தேங்கும் ஓடை நீருளா நீங்காத அவள் நினைவிலா
தீங்கிலாத் தமிழ்ப் பண்ணிலா பாங்காய் அமைந்த கவியிலா
எங்கே அந்த வெண்ணிலா ! எங்கே அந்த வெண்ணிலா ! !

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Dec-18, 3:15 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 138

மேலே