தனிமையும் அழகு

மேகம் கொஞ்சும் வானிலையில்
வெண்ணிலவை ரசித்தபடி நான் அமர்ந்திருக்க
காதுக்குள் ரகசியம் சொல்லும் சாக்கில்
என்னை தீண்டி செல்லும் தென்றல் இருக்க
சிணுங்கிய படி நான் சிரிக்கிறேன் ,
மழலை போல் என்னிடம் கண்ணாம்பூச்சி விளையாடுதம்மா
அந்த வானத்து நட்சத்திரமும்
தேனிசை கச்சேரி நடத்துதம்மா
இருளில் பூச்சிகளும்
மின் விளக்குகள் என்னை பார்த்து கண்ணடிக்க
வெக்கம் தான் என் புன்னகையில் மறைந்திருக்க
அமைதியின் சங்கீதத்தில்
தனிமையின் அணைப்பில் உறங்கும் எனக்கு
தனிமையும் அழகாய் போகுதடி

எழுதியவர் : ஹேமாவதி (20-Dec-18, 5:07 pm)
பார்வை : 911

மேலே