கஜா புயல்

ஏழைக்கு இன்பம் ஒன்று உண்டு..
கேட்டது கிடைத்திட
மனம் முழுமையாய் மகிழ்ந்திடும்...

இருப்பார் இல்லார்க்கு ஈவதிலும்
இன்பம் ஒன்று உண்டு..
அது ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பதில்...

சுரேஷ்... உனது
பயண தூரம்.. பயண நேரம்...
கஜா புயலால் துயருறும்
கடைக்கோடி மனிதர்களைக்
கண்டுபிடித்து கண்ணீர்
துடைத்த உனது
ஒருங்கிணைப்பு.. உழைப்பு..
அபாரமானது..

பிரமிக்கவைக்கும் விஷயங்களை
அனாயசமாகச் செய்தது
அசாத்தியமானது...
பாராட்டுதலுக்குரியது...

கஜா தாக்கிய இடத்திலிருந்து
நீ அனுப்பிய படங்கள்
பாதிப்புகளைக் காட்டியது...
தேவைப் படுவோர்க்கு
தேவையானதைக் கொடுப்பதால்
உண்டாகும் மகிழ்ச்சி
மார்கழித் திருப்பாவை
தரும் மகிழ்ச்சிக்கு ஒப்பானது..

உன்னை நீ இன்னும்
உயர்த்திக் கொண்டாய்..
ஜிஸிஇ வாட்ஸப் குழு
தன்னால்... உன்னால்...
இன்னும் அர்த்தம் உடையதாய்
ஆக்கிக் கொண்டாய்...

உதவிய கரங்கள் அனைத்தும்
உன்னால் உன்னதமானது...
மனம் மகிழ்ச்சியால்
நிறைந்து போகிறது...

அவரவர் கைகளை அவரவரே
முத்தமிட்டுக் கொள்ளும்
நேரம் இது...

அவரவர் முதுகை அவரவரே
தட்டிக் கொள்ளும்
தருணம் இது...
நன்றி! நன்றி!! நன்றி!!!
👍👏🙋🏻‍♂🙏🌹💪💯🤝

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (22-Dec-18, 12:48 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 91

மேலே