நட்பு
வேள்வித்தீயில் தீ மூட்டியபின்
வேதமந்திரங்களும் அவிசும் சேர
கடைசியில் கிடைப்பதே
வேள்வியின் பயன்.....பிரசாதம்
மேளம், மிருதங்கம் இருபக்கமும்
சேர்ந்து இசைக்கலைஞர் தட்டி வாசிக்க
நம் காதில் வந்து சேரும் இனிய ஓம்கார நாதம்
இப்படித்தான் இரு நல்ல நண்பர்களின்
கூட்டில் உதிப்பதுதான் நட்பு
அவ்விருவருக்கும் உயிருள்ளவரை
துணையாய் இருக்கும் உயிராய்.