தமக்கை

எல்லாருக்கும் அமைவதில்லை........
தமக்கை அவள் தாயாக தந்தையாக மாறும் தருணம்........
நான் இருக்கும் நிலை அவள் ஆசைகளை இழந்து நான் அடைந்தது.........
தந்தை எனக்கு எல்லாமாக இருந்து இருந்தால்
ஒருவேளை அவள் அருமை தெரியாமல் போயிருக்கும்.......
என் ஆசைகளை நிறைவேற்ற அவள் ஆசைகளை மறந்தால்..........
எங்கிருந்தோ வந்த ஒருவர் அவள் கரம் பிடிக்கையில்
கண் கலங்கி நின்றேன்............
நான் பிடித்து நடந்த விரலை இன்னொருவர் பிடிப்பத்தை
ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தேன்..........

எழுதியவர் : மீனாட்சி ந (22-Dec-18, 1:08 pm)
சேர்த்தது : மீனாட்சி
பார்வை : 79

மேலே