ஆனால் இன்று?
சிறுவயதில் வாழ்க்கை
என்னவென்று புரியாதநேரத்தில்
கூட
மகிழ்வுடன் ஆடிப்பாடி
திரிந்தோம் கவலைகள்இன்றி.
ஆனால் இன்று?
கவலைகள்இருந்தும் அதுபுரியாமல்,
தோல்விகள்இருந்தும் அதுதெரியாமல்,
வாழ்ந்தோம் அன்று.
ஆனால் இன்று?
கைகோர்த்து விளையாடிய
இடங்களும்,மணலால் கட்டிய
வீடுகளும்,
காய்களுடன் அரிசிசேர்த்து
சமைத்து ஆளுக்கு
ஒருகவளம் வீதம்
உண்டஅந்த சந்தோசம்,
இன்று ஐந்துநட்சத்திர
உணவகத்தில் குளிர்ரூட்டப்பட்ட
அறையில்அமர்ந்து சாப்பிட்டநொடிஇல்லை.
எங்கேசென்றது அந்தசந்தோசம்.
புழுதிக்காட்டில் ஓடிப்பிடித்து,
பள்ளிக்கூட மணியோசை
கேட்டதும் யார் முதலாவது
ஓடுவது என்று
ஓடிவந்த அந்த
ஒருநொடி ஓடும்ஆசை.
இன்று எங்கே?
பட்டாம்பூச்சி பறக்க
அதைநான் தான்
பிடிப்பேன் என்றுஅதன்
பின்னே ஓடிக்களைத்த
களைப்பில் வந்தசந்தோசம்,
இன்று எங்கே?
ஐந்துபைசாவுக்கு ஐந்துமிட்டாயும்,
எனக்குயானை ரொட்டிதான்வேண்டும்
என்று
அடம்பிடித்த போதும்சிரித்துக்கொண்டே எடுத்துக்கொடுத்த அந்தபாட்டியும்
கடைஇருந்த மரத்தடிநிழலும்,
இன்று எங்கே?
பள்ளி முடிந்து
பசியுடன் வருவார்களே
என்று
என்அம்மா எங்களுக்குவைத்த
தின்பண்டங்களை என்தங்கையோட
பங்கையும்நானே சாப்பிட்டுஅம்மாவிடம் அடிவாங்கி அழுதநொடி
என்கண்ணீர் துளிகளை
என்தங்கை துடைத்துவிட்ட
அந்த பாசம்
இன்று எங்கே?
-தொலைத்து விட்ட சந்தோசத்தை தேடும் ஒரு இதயத்தின் கண்ணீர் வரிகள்.........................