தங்கத் தாமரை நெஞ்சில் பூத்தது

அழகான பெண்ணின் அப்பா
அன்பான மாமா தான்டா
அழகான அவளின் வீடோ
அருமையான சொர்க்கம் தான்டா
கருமையான விழியால் அவளும்
கருணையோடு என்னைப் பார்த்தாள்
பெருமையாக நானும் அவளை
பெரிதாக உற்று நோக்க
பெண்மையின் நாணத்தாலே - கால்
பெருவிரலால் கோலம் போட்டாள்
தரிசலான நெஞ்சில் இன்று - என்
தையலால் நீர்தெளிக்க
தங்கத்தால் தாமரை ஒன்று - நெஞ்சில்
தடாலென்று பூத்தது நண்பா…
…. நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (27-Dec-18, 6:03 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 249

மேலே