ஒரு பிடி சோறேனும்

புதுசா பிறந்த காலையில
புயலே நீ வந்து என்ன செய்ஞ்ச
புதுசா புத்த பூக்கள எல்லாம்
இளசா இனி எப்ப முளைக்க வைப்ப..?

இளமரம் முதுமரம் பாராம
கனிமரம் காய்மரம் ஏன் முறிச்ச..?

கரையில கட்டிய கூர வீட்ட
முகவரி இல்லாம ஏன் அழிச்ச..?

வயலா நிக்குற பூமியில
புயலே புயலே ஏன் நுழைஞ்ச..?

தொண்ட தாகம் கொண்ட போதும்
அருந்த நீரும் தராம ஏன் உருக்குலைச்ச..?

வாழ நட்டவன் வச்ச வாழைய
வழைச்சி ஒடிச்சி ஏன் அழிச்ச..?
ஓ..
அநியாய அரசுக்கு அச்சம் காட்ட
அநியாயமா மனுச உசிரளிச்சியோ..!

அழியும் அரசாங்கம்
அழிவு பார்க்க வரத்தான்
அஞ்சாறு மாவட்டம்
மிஞ்சாம பஞ்சமாக்கினியோ..!

வந்த நீ உசிரெடுத்துப் போனாலும்
செத்த நாங்க பசியெடுத்துக் கிடந்தாலும்
புயலடிச்ச பூமியில..போரடிக்க போறவரே..!
போரடியேனும் வாங்கி தரலாம்
ஒரு பிடி சோறேனும்..
தைரியமா இருமையா..

எழுதியவர் : செ.பா.சிவராசன் (29-Dec-18, 10:13 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 60

மேலே