அம்மா கீர்த்தனை 4( oru ponmaanai mettu)

ராகம் பூபாளம் தாளம் ஆதி

(ஒரு பொன்மானை நான் பாட தகதிமிதோம் மெட்டில் பாடவும்)

ஆஅ..................

என் அன்னையே உனைப்பாட நான்வந்தேன்
உன் அருள்தன்னை தினம் வேண்டி நான் வந்தேன்

அன்னையே நீ எனக்கருள்வாய்
அன்புடன் தினம் என்னைக் காப்பாய்
உன் மலரடி பணிந்தேத்துவேன்
அதில் பூமலர் தினம் சாற்றுவேன் (என்)

தத்தத் தகதிமி தத்தத் தகதிமி
தத்தத் தகதிமி தோம்
தாம்கிட ததிகிட தாம்
தாம்கிட ததிகிட தை
தாம்கிட ததிகிட தாம்கிட ததிகிட
ததீம் தகிட ததீம் தகிட ததீம் தகிட தோம்

பைந்தமிழ் பாவினின் உன் புகழ் பாடிட
பற்பல பனுவல் எடுத்து வந்தேன்
பாமலர் பூமலர் நாளுமே சூட்டியே
பதமலர் போற்றிட நான் வந்தேன்

எந்தன் அன்னை உன்னை என்றும் துதிப்பாட
எழிலுடன் வருவாய் என் தெய்வமே
ஏற்றம் பல தந்தே பாரில் நான் உயர
வாழ்த்தியே அருள்வாய் என்றென்றுமே

கலைநிறை தெய்வம் நீயே
காருண்ய செல்வம் நீயே
என் அன்னையே உனைப்பாட
நாள்தோறும் உனைப்போற்ற
மதி தன்னில் கவிசேருது
என் மதி தன்னில் கவிசேருது

அன்னையே நீ எனக்கருள்வாய்
அன்புடன் தினம் என்னைக் காப்பாய்
உன் மலரடி பணிந்தேத்துவேன்
அதில் பூமலர் தினம் சாற்றுவேன் (என்)

நாதிந்தின்னா நாதிந்தின்னா
நாதிந்தின்னா நாதிந்தின்னா
தித்தா திகிதிமி தித்தா திகிதிமி
தித்தா திகிதிமி திக தானதா
திக தானதா திக தானதானதா l

சந்தன குங்கும அலங்காரம் செய்தே
சரணங்கள் பாடியே நான் மகிழ்வேன்
சரணமே சரணம் என்றுனைப் போற்றியே
சந்ததம் உந்தனை வாழ்த்திடுவேன்

வாழ்க வளமுடனே நாளும் மகளெனவே
வாழ்த்துக்கள் கூறியே நீவருவாய்
வையம் உள்ளளவும் வாழ்த்தித் துதிப்பாட
வரமது தந்திட நீஅருள்வாய்

வா வா என் அன்னையே தினம்
தா தா உன் தயையே
எந்தன் மாதாவே உனைப்பாட
நாள்தோறும் உனைப்போற்ற
மதி தன்னில் கவிசேருது
என் மதி தன்னில் கவிசேருது

அன்னையே நீ எனக்கருள்வாய்
அன்புடன் தினம் என்னைக் காப்பாய்
உன் மலரடி பணிந்தேத்துவேன்
அதில் பூமலர் தினம் சாற்றுவேன் (என்)





எழுதியவர் : ஸ்ரீ G .S . விஜயலட்சுமி (26-Aug-11, 10:24 pm)
பார்வை : 381

மேலே