ஒத்திக்கு வந்த பொங்கல்

கழல் ஆடிய கண்மாயில் - இன்று
கனல் பறக்கிறது தண்ணீருக்கு வழியின்றி

புதர் புதராய் நெல் விளைந்த பூமி - இன்று
புயல் மழைக்கு குடம் வைத்து காத்திருக்கு

வெண்மேகத்தை பார்த்ததால் புன்செய் நிலம் - இன்று
விழல் விளையும் வேலையை செய்கிறது

நவினத்தின் பிடியில் சிக்கிய நன்செய் - இன்று
நாலு வகை செடி முளைத்து நாவறட்சியோடு உள்ளது

கோவினங்கள் காளையோடு குதுகலித்த ஏரி - இன்று
கோரப்பசியோடு கொடி மின்னலுக்கு பார்த்திருக்கு

அருமையான தென்றல் தரும் மரம் - இன்று
குஷ்டரோகி போலவே கருகிய மரக்கிளையுடனிருக்கு

இருந்தாலும் “தை” தை தையென வந்ததாலே - உள்ளத்
தவிப்பெல்லாம் தள்ளி வைத்து - உலக
ஓட்டத்தோடு இணைந்து ஓட - ஒரு பவுன் நகையை ஒத்தி வச்சி ஒருவாறு ஓட்ட வேண்டும் பண்டிகையை.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Jan-19, 9:05 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 114

மேலே