பொங்கல் பொன்வளையல்காரி

பொங்கும் பொங்கலிடும்
புதிதாய்க் கட்டிய மனைவி
பொன்வளையல்கள் குலுங்க
புன்னகையுடன் சூசகமாகச் சொன்னாள்
கணவனிடம்
எலி வளையானாலும் தனி வளை வேண்டும் !
பொன் வளையல்களும் கொஞ்சம் நகையும் தந்தால்
தனி வளை சாத்தியம் என்றான் புத்திசாலி கணவன் !
அப்படியானால்
வாடகை வளையிலே வாழ்ந்தால் போதும் என்றாள்
வளையல்களை ஆட்டிக் காட்டிய
பொன்வளளயல்காரி !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jan-19, 10:16 pm)
பார்வை : 58

மேலே