காதல் மடல்

என் அன்புள்ள அன்பே,
நான் தேடலில் நுழைந்தபோது
என் ஒளியாய் நீ நீண்டாயே என் பாதையோடு ஏன் மறைகிறாய் மின்னில்லா ஒளிவிளக்காய்
என் கரம்பிடித்து ஆறுதல் கூற யாரும் இல்லையே
என் குறைகளை கொட்டிட யாருக்கும் நேரமில்லையே
என்றும் என் நிழலாய் இருந்த உன்னை
இருளில் தொலைக்க போகிறேனே கல்நெஞ்சோடு

பிரிந்தும் வாழ்கிறேன் உன்னை நினைவோடு
துயரத்தில் இன்னும் சாகாமல்...

தானாய் எந்தன் நாவின் நுனிகள்
உந்தன் பெயரைச் சொல்லி
எனக்கு நினைவூட்டுகிறது
துயரத்திலும் துணைநிற்க ஒருத்தி இருக்கிறாள் என்று...

மார்கழி வெயிலே
சித்திரைப் பனியே
உனை நான் மறவேனோ?

நானமெனும் ஆறு கரை புரண்டோடுகிறது
அதை ஒளித்து வைக்க உன் இதழெனும் அணையளிப்பாயா?
என் தீராதவமே

தென்னகத்துக் குயில்களெல்லாம் இசை பயின்றது வெண்ணிலவே உன் கால் கொழுசொலியாலே

செம்பருத்திப் பூக்களெல்லாம் நெகிழ கற்றுக்கொண்டது செஞ்சிலையே உன் கண்ணிமையாலே

எழுதியவர் : கா.மணிகண்டன் (15-Jan-19, 4:26 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
Tanglish : kaadhal madal
பார்வை : 2298

மேலே