பிள்ளை மனது

ஆடும் பிள்ளைகள் விடுமுறையில்
ஆட்டம் போடுவர் காட்டினிலே,
ஆடுகள் வந்தால் மேய்ச்சலுக்கு
ஆட்டம் பாதியில் நின்றுவிடும்,
தேடும் இரைக்குத் துணையாகி
தேடித் தழைகள் கொண்டுவந்தே
கூடிக் கொடுப்பர் ஆடுகட்கே,
குழந்தை உளமிது வாழியவே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Jan-19, 7:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pillai manathu
பார்வை : 92

மேலே