ஓவியக்கண்காட்சி

இயற்கைஅரசி
மந்திரத்தூரிகையால்
இட்ட
வண்ணஓவியக்கண்காட்சி
திருத்தப்படாத
வண்ணஓவியம்
தீட்ட
கார்முகில் தேரில்
மின்னல் விளக்கு
பெண்ணுடன்
இயற்கைஅரசியின்
பல்லக்கு
பவனி
வெள்ளி மழை சரங்கள்
பச்சை கண்ணாடி
இலைத் தட்டில்
சீர்வரிசை அணிவகுக்க
செவ்வாம்பல் பட்டுடன்
காளான் குடைகள்
நிழலில்
கோலாகல வைபவம்
கொன்றை மரங்கள் அட்சதை தூவ
எறும்பு மகளின்
உல்லாச உலா
பன்னீர் மழையாய்
மரங்களும் சிலிர்ப்புற்று
அசைந்தாட
நாட்டியப் போட்டிக்கு
மயிலும் தான்
ஆடிமுடிக்க
மண்மேடையில்
மாதவி மயிலாள்
சிந்திய
இறகு சதங்கை
குளத்தங்கரை
மீன்களுடன்
போட்டியிட
அசைந்தாடிய
தவளைக்கூட்டங்களின்
இன்னிசைக் கச்சேரியின்
இனிய துவக்கம்

எழுதியவர் : புலவர்.பி.ஆர்.லக்ஷ்மி (28-Aug-11, 6:02 am)
சேர்த்தது : vairamani
பார்வை : 276

மேலே