நடமாடும் பல்கலைக்கழகம்

அழகிற்கு நீ ஓர்
நடமாடும் பல்கலைக்கழகம்!

உன் கூந்தலின் நளினம்
அது காற்றினி லாடும் நடனம்!

உன் புன்னகையில்
என்றும் ஏமாறும் யாசகர் கூட்டம்!

வண்டுகள் சூழும் நின் அதரத்தால்
பூக்களுக்கிடையே சில சலசலப்பு!

இரவினில் வெளிவராதே
விண்மீன்கள் சூழ்ந்துக் கொள்ளும்
உன்னை தாயென்று!

உந்தன் கால்கொலுசு சத்தம்
காற்றை பிடித்துக் கிளித்து
தென்றலாக மீட்டுதடி!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (16-Jan-19, 6:37 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 195

மேலே