தலையங்கம் ---------விகடன்

தடை - மீறல் என்ற இருமைகளின் வழியாகவே மனிதகுல வரலாறு உருவானது. உடல், மனம், சிந்தனை, செயல், புழங்குவெளி ஆகியவற்றின் மீதான தடைகளின் வழியாகவே, சமூக அமைப்பு தன் ஒழுங்குநிலைகளை வடிவமைத்துக்கொண்டது. தடை என்பது மானுட வரலாற்றில் ஒரு புராதன ஆயுதம். அதன் நுட்பமான நவீன வடிவம் ‘தணிக்கை’ எனலாம்.

தடை என்பதும் தணிக்கை என்பதும் வரலாற்றில் எப்போதும் மாபெரும் அச்சுறுத்தல்களாகவே இருந்துவருகின்றன. மீறலும் தொடர்ச்சியான புதிய சிந்தனைகளும்தான் மனித வாழ்வில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. ‘சூரியமையக் கொள்கை’யை முன்வைத்த கலீலியோ, ‘மூலதன’த்தின் வரலாற்றைச் சொன்ன கார்ல் மார்க்ஸ் எனச் சிந்தனைத் தளங்களின் விரிவுக்குக் காரணமாக இருந்தவர்கள் அனைவருமே, அன்றைய அதிகாரத்தின் தடைகளையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்ததே வரலாறு. சிந்தனைகள் அன்று தடைகளின் முன் மண்டியிட்டிருந்தால், மனிதகுலம் இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டிருக்க இயலாது.

மதத்தால், சாதியால், அதிகாரத்தால், இன்னும் இங்கு தொடரும் தடைகளும் தணிக்கைகளும், அவற்றுடனான நம் நிகழ்காலப் போராட்டங்களும் உரையாடல்களும் அதன்மீதான விமர்சனங்களும் இவ்விதழில் சிறப்புக் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய உரையாடலை வரலாற்று நினைவுகளோடு இங்கிருந்து நாம் தொடங்கலாம்!

-ஆசிரியர்

எழுதியவர் : (17-Jan-19, 6:54 pm)
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே