இன்னுமொரு நாள்

கடிகார மைதானத்தில்
ஓட்டப் பந்தயம்!
பந்தயக் களத்தில்
இருமுட்கள்!
விதிமுறை
சின்ன முள்
பெரிய முள்ளை
துரத்துவது!
12 மணிக்கொருமுறை
ஒரு நொடி ஓய்வு!
பந்தயப்பணம்
ஒருநாள்!
முதல் 6 மணி ஓட்டம்
நிழவின் நிழலில்
அமைதியாய்!
அடுத்த 6 மணி ஓட்டம்
வெயிலின் நிழலில்
இளஞ்சூட்டில்!
மூன்றாம் 6 மணி ஓட்டம்
வெயிலின் தாக்கத்தில்!
நான்காம் 6 மணி ஓட்டம்
மீண்டும் நிழலின்
மடியில்!
நிழலின் நிழலில்
தொடங்கி
மடியில் உறங்கும்
இடைவெளியில்
முடிந்தது என்
வாழ்க்கை பயணத்தில்
இன்னுமொரு நாள்!

எழுதியவர் : ரகுஸ்ரீ (19-Jan-19, 10:06 am)
சேர்த்தது : ரகுஸ்ரீ
பார்வை : 646

மேலே