அழியாத கோலம்
ஆட்டம் பாட்டு ஆரவாரம்
தெருவில் குலசுவாமி ஊர்வலம்
அரை உறக்கத்தில் இருந்த என்னை
எழுப்பினாள் மனைவிக் கிழவி :
நம் வீதிப் பையன்கள் ஐந்து பேர் சளைக்காமல் ஆடுகிறார்கள்
மூக்குக் கண்ணாடியை
மாட்டிக் கொண்டு
சுவாமியை கைகூப்பி விட்டு
கூர்ந்து பார்த்து லயித்தேன் -
ஆடுபவர்கள் ஆறு பேர் .