குடியரசு தினம்

முடியாட்சி முடிந்து
போக

அடிமைத் தலை
அறுந்து போக

தியாகங்களும்
சோகங்களும்

கொடுத்துபோன

சுதந்திரகாற்றை
சுவாசித்தே

குடியரசானோம்

மகிழும் தருணம்
தான் இது

மகிழத்தான்
முடியவில்லை

கூரில்லா குடி

அரசை
தேர்ந்தெடுக்க

கையூட்டு
பெறுவதும்

இலவசங்களுக்கு
பல் இளிப்பதும்

உரிமையை
கேட்டு

உதைபட்டு
உயிர்விடுவதும்

வாடிக்கையான
வேடிக்கையானது

குடியரசு திண
அணி வகுப்பு

வருட வருடம்
தவறுவதில்லை

உலகவங்கி
கடன் சுமைபோல

வாழ்க ஜனநாயகம்
வெல்க குடியரசு

எழுதியவர் : நா.சேகர் (25-Jan-19, 9:00 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1030

மேலே