இது வேற பட்

இது வேற 'பட்'டு
@@@@@@@@@@@
■■■■■■■■■■■■■
ஏன்டா மணிவண்ணா, எங்கடா போயிட்டு வர்ற?
@@@@
கடைக்குப் போயிட்டு வர்றேன். சொல்லிட்டுத்தானே போனேன். அத மறந்திட்டீங்களா தாத்தா?
@@#@
ஆமாம்டா. மறந்துட்டேன். நீ வெளில போயிருந்த போது உன்னக் கேட்டுட்டு ஒரு பையன் வந்தான்.
@@@@@
அப்பிடியா. அவம் பேரச் சொன்னானா?
@@@@
அவம் பேரக் கேட்டேன். அவன்
என்னமோ 'பட்'டுன்னு சொன்னான். நீ சொன்னது இப்ப ஞாபகத்துக்கு வருதுடா மணி. 'பட்'ன்னா 'ஆனால்'ன்னு நீ தான் சொல்லிருக்கே. 'ஆனால்'னுகூட பசங்களுக்குப் பேரு வைக்கறாங்களா?
@@@@@
இது ஆங்கில 'பட்' இல்லங்க தாத்தா. இந்த 'பட்' வேற 'பட்'.
@@@@
என்ன 'பட்'டுடா இந்த 'பட்'டு?
@@@@@@
இது கன்னட 'பட்'. 'ஆலியா பட்'டுனுகூட ஒரு நடிகை இருக்கிறாங்க. அவுங்க அப்பா பேரும் 'பட்'னு தான் முடியும்.
@@@@
சரி, அந்தக் கன்னடா 'பட்'டுக்கு என்னடா அர்த்தம்?
@@@@@
என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. 'பட்'ங்கிறது குடும்பப் பேரா இருக்கும். இல்லனா சாதிப் பேரா இருக்கும்.
@@@@@
அப்பிடியா? சரி, சரி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழரல்லாத இந்தியர்களில் பெரும்பாலோர் அவர்கள் பெயருடன் சாதிப் பெயர் அல்லது குடும்ப் பெயரை இணைத்துக்கொள்வது வழக்கம்.

எழுதியவர் : மலர் (29-Jan-19, 10:10 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : ithu vera bad
பார்வை : 32

மேலே