வாழ்க்கையில் டைமிங்

வாழ்க்கையில் செல்வம் அத்தியாவசியம்
இது சிறுவயதிலிருந்து ஆழமாய் மனதில் புகுந்திட
கருமமே கண்ணாயினர் என செல்வம்
ஈட்டுவதிலியே மனம் ஒன்றி இருக்க
பெருஞ்செல்வம் திரட்டிவிட்டேன் -இப்போது
எல்லாம் இருந்தும் 'விளக்கேற்றிவைக்க ஒருவள்-என்னவள்
இல்லையே ' என்று ஏக்கம்; கிடைப்பாளோ இனி
இப்படி கூடவே நிழல்போல் வரும் சந்தேகம்
கலங்கிய உள்ளத்திற்கு ஒன்று மட்டும் தெளிவானது
வாழ்க்கைப் பயணத்தில் 'காலம் அமைத்தல்' அதாவது
'டைமிங்' என்கிறோமே ஆங்கிலத்தில்
அதுவும் மிக மிக அவசியம் .................ஒன்றிக்கே அதிக
முக்கியத்துவம் தர, மற்றோன்று கிடைக்காமல் கூட
போகக்கூடும் ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jan-19, 1:30 pm)
பார்வை : 111

மேலே