சிணுங்கல்

பூக்களுக்கும் காதல் வரும் - உன்
முகத்தை பார்த்தால்
சிந்திக்க மறக்கின்றேன் - உன்
சின்ன விழிபார்வையாலே
சந்திக்க துடிக்கின்றேன் - உன்
அன்னநடை அழகிற்கு
ஓவியமாய் தெரிகின்றாய் - உன்
ஒரே விழிப்பார்வையாலே
காவியமாய் தெரிகின்றாய் - உன்
காதல் மொழி பேச்சாலே
என் காதலுக்கும் உயிர்ப்பு வரும் - உன்
சிணுங்கல் மொழி வெட்கத்தாலே

எழுதியவர் : புவனேஸ்வரி (30-Jan-19, 3:47 pm)
சேர்த்தது : புவி
பார்வை : 355

மேலே