தேடல்
தோளோடு தோள் உரசி நடக்கையிலே
உன்னைத் தொட்டு...
என்னைத் தழுவிய
தென்றலில் தேடுகின்றேன்.....
நீராடுகையில்..
உன்னை நனைத்து
என்னை தழுவிய
சிற்றோடையில் தேடுகின்றேன்....
மடித்து வைக்கப்பட்ட பக்கங்களில்..
உன்கை தொட்டு...
என் விரல் தீண்டிய
புத்தகங்களில் தேடுகின்றேன்.....
என் தேடலில்...
உனைத் தேடி...
உன் பரிசங்கள் மீள...
உன் நினைவுகளை மீட்டெடுக்க முயலுகின்றேன்...
என் தேடலே...
என் தேடலே...
என் சுவாசங்களை மீட்டிடுவாயா....?