உனக்காக என்னிடம்
என்னிடம் என்ன இருக்கின்றது,
உனக்குக்கொடுக்க என்கின்றாயே,
உன் விழிகளிடம் உரைத்துப்பார்
அதற்குத் தெரியும்
காதலைக் குழைத்து கனிவுடன்
எப்படி எரிவதேன்று.
உதடுகளின் ஒவ்வொரு நரம்புக்கும் புரியும்
ஊமைச் சொற்களில் மயங்கிக்கிடக்க வைக்க.
ஆன்ம உணர்வுகளைச் சுமந்து நிற்கும்
உடலுக்குத் தெரியும் உலக தர்மம் அனைத்தும்.
நான் கேட்பதெல்லாம் உன்னிடம் ஒன்றுதானே,
இடைவளைத்து மனசில் முகம் புதைக்க வழி.
ஜென்மம் ஈடேற, ஈஸ்வரியினில் கலந்து
ஈசவரனை அடையத்தானே.
ஜென்ம பாவங்களைக் களைந்து
ஜென்ம முடிவுக்கு வழி வகுக்கத்தானே.