நீர் பரப்பில் ஒரு மீன்

நீர் பரப்பில் ஒரு மீன் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

சிறுமியர் விளையாடும்
ஓட்டாஞ்சில்லை குளத்து நீரில்
ஓரக்கண்ணால் எறிந்தபோது
துள்ளி துள்ளி ஓடுவதுபோல்
நீர்பரப்பில் துள்ளி துள்ளி
நீந்தி சிலிர்க்கும் ஒரு மீன் !

அமைதியான நீர்பரப்பில்
ஆதவன் கதிர் ஒளியில்
பல வண்ணங்களில்
நீந்தி விளையாடும்
ஒளிரும் மீன்குஞ்சுகள் !

புரண்டு ஓடும் நதியில்
ஆனந்தமாக குளிக்கும்போது
நம் பாதங்களை மட்டுமல்ல
நம் உள்ளங்களையும்
முத்தமிடும் மீன்கள் !

கதிரவனின் ஒளிக்கதிர்கள்
பறக்கும் பறவை ஒலிகள்
பதுங்கும் நண்டுகள்
மணக்கும் தாமரை மலர்கள்
கண்ணாடித் தொட்டி நீரில்
தேடித் தேடி காணாமல்
கவலையுடன் நீந்தும் மீன்கள் !

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (31-Jan-19, 10:56 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 213

மேலே