கனவெனும்

அதிசய கனவினில்
அவள் முகம் பார்த்ததும்
முதல் தரம் முதல் தரம்

இடையினில் இருப்பது
கனமென்று இறக்கி விடவும்
மனமில்லாது காதலை குழந்தையாய்
தூக்கி சுமக்குதே இந்த மனம்
முதல் தரம் முதல் தரம்

அழகிய காலையில்
மலர் மனம் தன் இயல்பாய்
விரிந்து காட்டியது
அழகிய இதழ்கள் என்னிடம் என்பதும்
முதல் தரம் முதல் தரம்

அருவிகள் தாங்கிடும்
மண்வளம் குளிர் கொடுப்பதில்
தாமதம் செய்வதில்லையே
என்று அவள் வாதம் செய்வதும்
முதல் தரம் முதல் தரம்

அடிக்கடி கனவினில்
வருவது நான் என்றால்
வராமல் போவது என் தங்கையா
என்றவளின் நகைச்சுவையும்
முதல் வரம் முதல் வரம்

நடுங்கிய தேகங்கள் நம்மிடம்
சிணுங்கிய ரகசியங்கள் நம்மிடம்
நிலவு செதுக்கிய சிற்பங்களாய்
நாம் கச்சிகள் களைந்தே
இச்சைகள் தீர்ப்பதும் வரங்களில்
முதல் தரமே! முதல் தரமே!

எழுதியவர் : megalai (1-Feb-19, 4:26 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 114

மேலே