நிலையை உணர்த்தும் எவருக்கும்

காவலுக்கு அமரவில்லை மங்கையிவள்
--ஆவலுடன் காத்திருக்கும் நங்கையிவள் !
சோகமது துளியுமில்லை முகத்தினில்
--மோகமது நிறைந்துள்ள அகத்தினில் !
இளமைக் காலத்தின் காட்சியிது
--இனிமைப் பொழுதின் மாட்சியிது !
கானம் பொழிந்திடும் வேளையிது
--நாணம் வழிந்திடும் சிலையிது !
பூமகள் புரியும் புன்னகையில்
--பூக்களும் மலர்ந்தது அருகில் !
கற்பனை கனவுகள் நெஞ்சில்
--கலைகள் அறிந்தவள் செயலில் !
நிலத்தினை நோக்கும் கண்களும்
--நிலையை உணர்த்தும் எவருக்கும் !
நினைப்பவை நிச்சயம் நிறைவேறும்
--நிழல்களை நிஜமாக்கி களிப்பூட்டும் !
பழனி குமார்
01.02.2019